“சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவும், பிமல் ரத்நாயக்கவும் முரண்பட்டுக் கொண்டார்கள். எனது பிரச்சினை பற்றி பேசப்படவில்லை. நான் எங்கு சென்று பேசுவது?” – என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து மேற்கண்டவாறு அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“எனது சிறப்புரிமை மீறல் பிரச்சினை பற்றி பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவும், பிமல் ரத்நாயக்கவும் முரண்பட்டுக் கொண்டார்கள். எனது சிறப்புரிமை மீறல் பற்றி பேசப்பிடவில்லை.
சிறப்புரிமை மீறலுக்காக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆளும் தரப்பு உறுப்பினரும், எதிர்த் தரப்பின் உறுப்பினரும் முரண்பட்டுக் கொண்டார்கள். எனது பிரச்சினை பற்றி பேசப்படவில்லை. நான் எங்கு சென்று பேசுவது? எனது உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகின்றது?” – என்றார்.