இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்குக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 8 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.