அமெரிக்காவின் வட கிழக்கு, பிடெல்ஃபியாவில் சிறிய விமானம் ஒன்று கட்டடங்களின் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் வீடுகள், வாகனங்கள் என்பன தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் விமானம் மோதியதில் தரையில் இருந்தவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் நேற்று இரவு (31 ) உடல் நலம் சரியில்லாத ஒரு குழந்தை மற்றும் ஐந்து பேரை ஏற்றிச் சென்ற சிறியரக மருத்துவ ஜெட் விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.