புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியர் என்பதுடன் மிகவும் அன்புடன் பழகும் மனிதர். பேராசிரியர் என்றபோதிலும் பெருமை கொள்ளாது தம்பி தம்பி என்றும் தம்பி கபில் என்றும் அழைத்து கதைகள் பேசும் உயர்ந்தவர்.
பொருளாதார ரீதியான விளக்கம் ஊடகத்துறை சார்பில் தேவைப்படும் போதெல்லாம் எந்த தயக்கமும் இன்றி கருத்துரைக்க வல்லவர்.
வவுனியா வளாகமாக இருந்த போது Diploma in Community Management கற்றபோது விரிவுரையாளராக அறிமுகமான பழக்கம் அன்னாரின் இறுதிவரை நீடித்தது.
புஸ்பநாதன் சேரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்