வவுனியாவில் புகையிரதம் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் உந்துருளி சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.