கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் 31.01.2025 தரம் 06 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வருடம் ஆறாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர்கள் இவ்வருடம் ஆறாம் ஆண்டுக்கு வருகை தரும் மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர். அத்துடன் பாண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வானது பள்ளியின் பிரதி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
ADVERTISEMENT
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மற்றும் மதகுருமார்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





