கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள ஒரு கொள்கலனில் நேற்று (30) இரவு 8:10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கொள்கலன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், கொழும்பு துறைமுக தீயணைப்புத் துறையும் கடற்படையும் இணைந்து இரவு 9:15 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.