மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்குத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வைத்து தனது இரங்கல் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “மாவை சேனாதிராஜா பேரினவாதத்துக்கு எதிரான மாபெரும் அடையாளமாக ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தவரும், பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார்.
ADVERTISEMENT
அவரது மறைவையொட்டிய எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” – என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையையும் கிள்ளி…
தொட்டிலையும் ஆட்டி விடுடா….