திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(30) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம், ஈட்டி எறிதல், பரிதி வட்டம் எறிதல் என பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதில் முதலாமிடமாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் மார்ச் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசியமட்ட மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக மத்திய அரசாங்கத்தின் சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் தெரிவித்தார்.
இந்நிகழ்வை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் ஆரம்பித்து வைத்துடன் குறித்த போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.