அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியதாக, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.
கன்சாஸிலிருந்து வந்த விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு விமான பணியாளர்கள் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது, அதேநேரம், ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் இருந்தனர் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகொப்டருடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.