கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் 29.01.2025 ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மது போதையில் அப் பகுதிக்கு வந்த ஒருவர் குளத்தில் ஒருமுறை குதித்துள்ளார்.
சிலர் அவரை தூக்கி வெளியில் விட்ட பொழுது மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார். பல மணி நேரம் வெளியில் வராத நிலையில் அப்பகுதி இளைஞர்கள் காணாமல் போன நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் அவர் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
33 வயது உடைய கணேசமூர்த்தி ரமேஷ் என்னும் இளம் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்