வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று (28)காலையில் இருந்து தற்போது வரை நீர் கசிந்து வருகின்றது.
ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்து வருவதனால் அதனை பார்வையிட அப்பகுதியில் பெருந்திரளானோர் இரவிலும் குவிந்து வருகின்றனர். அதிகமானோர் வெளி இடங்களில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது
செபமாலை தியானத்தில் பக்தர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுடன் பலர் ஆண்டவரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் செல்கின்றனர்.
ADVERTISEMENT



