போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை 10 ம் கட்டை பகுதியில் போதை மாத்திரைகளை தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி இ.எம்.பியரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழுவினர் உடன் குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 380 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் ஐ.பி. அமரசேன, சாஜன் செனவிரத்ன 54251, சாஜன் சமில் 68558, பொலிஸ் கான்ஸ்டபிள் கபுகொடுவ 82 971 ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

