அண்டார்டிகாவில் உள்ள 4,892 மீட்டர் உயரமான வின்சன் மலையின் உச்சியை இலங்கையரான ஜொஹான் பீரிஸ் (Johann Peries) அடைந்து சாதனை படைத்துள்ளார்.
வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் ஜொஹான் பீரிஸ் ஆவார்.
ADVERTISEMENT
ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான மலையை ஏறும் பணியில், 2018 ஆம் ஆண்டில் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை ஜொஹான் பீரிஸ் பெற்றார்.
இன்றுவரை, அவர் அவுஸ்திரேலியாவில் உள்ள கொஸ்கியுஸ்கோ மலை, ஆபிரிக்காவில் கிளிமஞ்சாரோ மலை மற்றும் ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ் மலை போன்ற உலகின் மற்ற உயரமான சிகரங்களையும் வெற்றிகரமாக அடைந்துள்ளார்.