பொலன்னறுவை, பக்கமுன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலஹெர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (27) காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சியம்பலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
சம்பவத்தன்று, வயோதிபர் தனது காணியிலிருந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பக்கமுன வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கமுன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.