பதுளை – ஹல்துமுல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை மற்றும் மித்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர்.
பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 57 கிலோ கிராம் மற்றும் 50 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹல்துமுல்லை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.