ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்தால் எவ்வித சிக்கலும் வராது என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டணியின் கீழ் ஐக்கிய மக்கள் சக்திக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்க முடியும் என்றும், இரு தரப்பும் இணங்கக்கூடிய செயலாளர் ஒருவரை நியமித்தால் முன்னோக்கிப் பயணிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
அத்துடன், இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் பணிகளைப் பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.