திருகோணமலை மாவட்ட விசேட தேவை உடையோர்கள் அமைப்பின் மூலமாக சக்கர நாற்காலி, ஊன்றுகோல், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு (25) திருகோணமலை நகர சபையின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு இலவச கண் சிகச்சை மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் தலைமை விருந்தினரான இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களால் மாணவர்களுக்கு கொப்பிகள், மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு சக்கர நாற்காலி, பொருளாதாரத்தில் பின்தாங்கிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் முதலியன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் தலைமை விருந்தினர் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அவர்கள், ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பொருட்கள் வழங்குவதைப் போன்று எப்போதும் விசேட தேவை உடையவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்று கூறினார்.
இந்நிகழ்வினை விஷேட தேவையுடையோர் அமைப்பின் தலைவர் திருமதி.செல்வராணி சித்தார்த்தன், மற்றும் செயலாளர் திரு.செல்வேந்திரன் உள்ளிட்டவர்களால் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்யப்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.