பத்தனை மவுண்வேணன் தோட்டத்தை சேர்ந்த இரண்டு உதவி தோட்ட கள உத்தியோகத்தர்களை தோட்ட முகாமையாளர் தாக்கிய சம்பவமொன்று நேற்று(23) இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தோட்ட கள உத்தியோகத்தர்களில் ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் கிளங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தோட்ட நிர்வாகத்துக்குள் இடம்பெற்ற உள்ளக சம்பவமே குறித்த தாக்குதலுக்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்ற அதேநேரம் முகாமையாளரின் தாக்குதலுக்கு உதவி முகாமையாளரும் உதவி புரிந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.