2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தமாக 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.