அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (22) மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்திற்கு உந்துருளி சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது, எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும், துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.