கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று (23) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றும், உந்துருளி ஒன்றும், தற்காலிக கடை ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நிகழும் வேளையில் பாரவூர்தியின் உள்ளே மூன்று நபர்கள் இருந்திருந்துள்ளனர் என்றும் சாரதி சிறு காயங்களுடன் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.