மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பிரிவில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ் – பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக புரவுன்சீக் தோட்ட பகுதியை சேர்ந்த 32 வயது உடைய திருமணமான ஆண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தாத்தா, பாட்டி ஆகியோரின் பாதுகாப்பில் இருந்த வேளையில் இடையே இடையே சிறுமி அந்த இளைஞன் வீட்டிற்கு முதியோருக்கு தெரியாமல் சென்று வந்ததைக் கண்ட அயலவர்கள் இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
அத்துடன் குறித்த சிறுமி கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மகப்பேறு மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.