திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூதூர், குச்சவெளி, சேருவில, கோமரங்கடவல, மொறவெவ, தம்பலகாமம் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலக பிரவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (21) பெறப்பட்ட புள்ளி விபரத் தகவலின் படி மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரும், கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 216 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 15 வீடுகளும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 5 வீடுகளும், மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 2 வீடுகளும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.