துருக்கியின் வடமேல் மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளிற்கு பிரபலமான ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மரக் கூரைகளை கொண்ட 12மாடி ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலை உச்சியில் அமைந்துள்ள கிரான்ட் கார்ட்டெல் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் உணவகம் அமைந்துள்ள பகுதியில் மூண்ட தீ வேகமாக பரவியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
234 பேர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.