வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழும் குடும்ப மாணவர்களுக்கு கிடைக்கவிருக்கும் 6000/= ரூபாவில் அசமந்தப் போக்கு காணப்படுவதாக மஸ்கெலியா முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் சுட்டிகாட்டியுள்ளார்.
அரசாங்கம் அறிவித்த இந்த பணத் தொகைக்கான விண்ணப்பங்களை ஒரு சில அதிபர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஏற்க மறுப்பதாகவும், தனக்கு சுற்று நிரூபம் வரவில்லை, பிரதேச செயலகம் அறிவிக்கவில்லை, ஹட்டன் வலயம் அறிவிக்கவில்லை என்று வருபவர்களிடம் அறிவித்ததாக பொது மக்கள் விசனம் அடைந்துள்ளார்கள்.
நாளை 22ம் திகதி முடிவு திகதி என்பதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்குமாறும், இதனால் அதிகமாக நுவரெலியா மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மஸ்கெலியா முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் சுட்டிகாட்டியுள்ளார்.