பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பகுதியில் உள்ள வயலில் காட்டு யானை தாக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அரலகங்வில , எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தன்று, இவர் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக வயலுக்குச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ADVERTISEMENT