தெல்தெனிய பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 62 வயதுடைய அம்பகொடே, கென்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவர் படகிலிருந்து வீழ்ந்து இவ்வாறு மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்தெனிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.