கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் கண்டி – பன்வில பத்தேகம வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விபத்தில் ஒருவர் காணாமல்போயுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.