சட்டவிரோதமான முறையில் பாரவூர்தி ஒன்றைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.