திருகோணமலை மாவட்ட நாமகல் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இன்று (19) அலஸ்தோட்டத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசான் கலந்து கொண்டு சுமார் 160 மாணவ மாணவிகளுக்கு குறித்த அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.