ஐ.சி.சி., சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பெப்ரவரி 19 முதல் மார்ச் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள், பாதுகாப்பு காரணங்களுக்கான துபாயில் நடக்க உள்ளன. பெப்ரவரி20ல் தனது முதல் போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது, அதன்படி ரோஹித் சர்மா அணித்தலைவராகவும் சுப்மன் கில் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
இந்திய அணியின் விபரம்
ரோகித் சர்மா (அணித்தலைவர்), சுப்மன் கில், கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், ஜடேஜா ஆகியோர் விளையாடவுள்ளனர்.