மட்டக்களப்பில் உள்ள வாவி ஒன்றிலிருந்து, நீரில் மூழ்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம், இன்று (18) காலை 10 மணிக்கு அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில், நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை கண்டு, பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.