முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.