வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று (16)இடம்பெற்றது.
இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி வருகின்ற 19, 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் இன்று மாலை 05.00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானதை தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றது.
புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை சிறப்பிக்கும் வண்ணம் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதைக் காணக்கூடியதாக உள்ளது.