மட்டக்களப்பு – ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் என்பவர் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சுகாதார வைத்திய அதிகாரி இறுதியாக மிச்நகர் பகுதிக்கு பொறுப்பாக பணியாற்றியதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு கல்லடி கலைமகள் வீதியிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உயிரிழப்பிற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் சொகோ தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.