நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கிராம அதிகாரியின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று மதியம் சுமார் 03.10 மணிக்கு மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ராமையா பாரதிராஜா வயது 40 லிந்துல மட்டுகலை தோட்டத்தை சேர்ந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த நபரின் உடலம் தலவாக்கலை பொலிசார் மேல் கொத்மலை நீர் தேக்க த்தில் இருந்து மீட்டு அடையாளம் காண பட்டு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளது என தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.