இலங்கையில் பழைமை வாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அஹதியாவுமாகிய மூதூர் மத்திய அஹதியா தனது 50 வது ஆண்டில் தடம் பதித்திருக்கின்றது.
இதன் 50 வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் (22-12-2024) ஆம் திகதியன்று திருகோணமலை மாவட்ட அஹதியாக்கள் சம்மேளத்தின் தலைவர் அஷ்ஷேஹ் M. எம்.வை.ஹதியதுல்லாஹ் மௌலவி அவர்களினால் மூதூர் மத்திய அஹதியாவின் பொன் விழா இலட்சினையானது வெளியீடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மூதூர் மத்திய அஹதியாவின் தலைவர் ஏ.எம்.அர்ஷத், உப தலைவர் ஹாபில் மௌலவி, செயலாளர் ஏ.எம்.நுஸ்கி மௌலவி, உப செயலாளர் அயாஸ் மௌலவி மற்றும் ஞாயிறு பாடசாலையின் உப அதிபர் நிஷ்பாக் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.