டெல்லியில் AKS Education Awards நிறுவனத்தினால் நடைபெற்ற “Global Education Fest” நிகழ்வில் சனிக்கிழமை (11) திருகோணமலை “GREEN TREE ENGLISH ACADEMY” நிறுவனத்தின் இயக்குனரும், ஆசிரியருமான திருமதி. மரிய ஜெயந்தா உமாசங்கர் சிறந்த ஆசிரியையாக (உலகின் 100 ஆசிரியர்களில் ஒருவராக) தெரிவு செய்யப்பட்டு, “Global Teacher Award” பட்டத்தினால் கெளரவிக்கப்பட்டு எமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரால் கற்பிக்கப்படுகின்ற மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் U.K நாட்டில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்குபற்றி உலகளாவிய ரீதியில் சாதனை புரிந்து பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதும், பாராட்டத்தக்கதும் ஆகும்.