அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
40 மற்றும் 47 வயதுடைய இரண்டு கஸகஸ்தான் பிரஜைகளே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் நேற்றையதினம் மாலை, அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், அவர்களைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.