மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தானது, வந்தாறுமூலை பகுதியில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தானது, முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.