வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பக்திப் பாடல்கள் இசைக்க மழைக்கு மத்தியிலும் தைப்பொங்கல் திருநாள் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்பு குழுவினரின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் இடம்பெற்றது.
இந்தப் பொங்கல் நிகழ்வில் மதத் தலைவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ன, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்த சமுதாயப் பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.