கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கரைப்பகுதியில் 15நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது.
குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்தும் அவர்கள் வருகை தந்தபோதும் உரிய சிகிச்சை வழங்கவில்லை. அதனால் குறித்த யானை உயிரிழந்துள்ளது. தற்பொழுது இறந்த யானையின் உடலில் துர்நாற்றம் வீசி வருகிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பார்வையிட்டனர்.