கடந்த ஜனவரி 3ஆம் திகதி வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மீன் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸ் நிலையம் மற்றும் மாத்தளை வலய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூன்று பேரை நேற்று (13) மாத்தளை வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 34, 38 மற்றும் 39 வயதுடைய கரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
அம்பலாந்தோட்டை மற்றும் குறுந்துகஹாஹெதெக்ம ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வத்தேகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நேற்றைய தினம் தெல்தெனிய நீவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸாரும் மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்துள்ளனர்.