வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளையில், மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் நேற்று (13) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு சென்னக்கிராமம் பகுதி மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலமானது மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.