நிந்தவூர் ஆலயக்கட்டில் உள்ள ஆற்றை உந்துருளியில் கடக்க முயன்ற வேளையில் ஆற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை மூழ்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தாயும், பிள்ளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன கணவன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான அப்துல் லத்தீப் இக்ராம் என்ற குடும்பஸ்தரே நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த இவர் சில நாட்களுக்கு முன் நாடு திரும்பி இருந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலம் நேற்றிரவு(13) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.