சீரற்ற காலநிலை நிவிவரும் நிலையிலும் உழவர் திருநாள் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலய பிரதமகுரு கீர்த்தி ஸ்ரீ வாசன் குருக்கள் தலைமையில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும்வகையில், இத் தைப்பொங்கல் பூசைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப் பூசை வழிபாடுகளில் பல்வேறு இடங்களிலுமிருந்து இந்துமக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து இந்து ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகளிலும் தைப்பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.