தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா இன்று(14) செவ்வாய்க்கிழமை தமிழர் வாழும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவே தைப்பொங்கல் ஆகும்.
அந்தவகையில் பிறந்திருக்கும் இந்த தைத்திருநாளானது அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் செழித்திட தினகரன் இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.