கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
கழுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் பெண்னின் உடல் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.