பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை பரந்தன் அதே பகுதியில் இருந்து பயணித்த உந்துருளி முச்சக்கர வண்டியின் பின்புறம் மோதுண்டதில் அதன் பின்புறமாக வந்த உந்துருளியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.